முகப்பு
செய்திகள்

ஹிந்தி பிக் பாஸ் வெற்றியாளர் ஆன நடிகை ஷில்பா ஷிண்டே!

டாஸ்க்குகளில் ஆர்வமாகப் பங்குபெறாவிட்டாலும் தேவையில்லாத சர்ச்சைகளில் ஈடுபடாததால் 40 வயது ஷில்பா...

Updated On : 30 ஜனவரி, 2024 at 11:59 AM
பகிர்:

ஹிந்தி பிக் பாஸ் - சீசன் 11, அக்டோபர் 1 முதல் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. கடந்த ஏழு வருடங்களாக ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கியதுபோல இந்த வருடமும் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றினார். 

கடந்த ஞாயிறன்று இந்த சீசன் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் நடிகை ஷில்பா ஷிண்டே வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு ரூ. 45 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. மற்றொரு பாலிவுட் நடிகையான ஹினா கான், இரண்டாம் இடம் பெற்றார். 

டாஸ்க்குகளில் ஆர்வமாகப் பங்குபெறாவிட்டாலும் தேவையில்லாத சர்ச்சைகளில் ஈடுபடாததால் 40 வயது ஷில்பா, ரசிகர்களின் ஆதரவைப் பெற்று வெற்றியாளர் ஆகியுள்ளார். 

இரு தெலுங்குப் படங்களிலும் ஒரு ஹிந்திப் படத்திலும் நடித்துள்ள நடிகை ஷில்பா, ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.