முகப்பு
செய்திகள்

தனுஷின் மாரி 2 & செல்வராகவன் - சூர்யா படங்களின் படப்பிடிப்புகள் தொடங்கின!

இவ்விரு படங்களிலும் கதாநாயகியாக சாய் பல்லவியும் இசையமைப்பாளராக செல்வராகவனும்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:03 PM
பகிர்:

தனுஷ் - பாலாஜி மோகன் கூட்டணியில் உருவாகும் மாரி 2, சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் படம் என இரு முக்கியமான படங்களின் படப்பிடிப்புகள் இன்று முதல் தொடங்கியுள்ளன. 

மாரி 2 படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி நடிக்கவுள்ளார்.

எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் உருவாகும் சூர்யா - இயக்குநர் செல்வராகவன் இணையும் படத்திலும் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். ரகுல் ப்ரீத் சிங்கும் மற்றொரு கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

இவ்விரு படங்களின் படப்பிடிப்புகள் இன்று முதல் தொடங்கியுள்ளன. இத்தகவல்கள் சமூகவலைத்தளங்களில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.