இலங்கையின் பிரபல பாப் இசைப் பாடகரான சிலோன் மனோகர் காலமானார். அவருக்கு வயது 73.
இலங்கையின் பாரம்பரிய இசையான பெய்லாவையும் பாப் இசை வடிவத்தையும் இணைத்து புதிய இசையைப் படைத்த சிலோன் மனோகர் சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார்.
அவர் பாடிய சுராங்கனி... சுராங்கனி பாடல் அவருக்கு ஏராளமான ரசிகர்களைப் பெற்றுத் தந்தது. சிங்களம், தமிழ், ஹிந்திப் படங்களிலும் நடித்துள்ளார். உலகம் முழுக்க இசை நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார்.
அவருடைய இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் சென்னையில் இன்று நடைபெறுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.