முகப்பு
செய்திகள்

பழம்பெரும் நடிகை கிருஷ்ண குமாரி காலமானார்

கிருஷ்ண குமாரியின் மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:04 PM
பகிர்:

பழம்பெரும் நடிகை கிருஷ்ண குமாரி காலமானார். அவருக்கு வயது 85. 

உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை எடுத்து வந்த கிருஷ்ண குமாரி பெங்களூரில் இன்று காலமானார். 1960களில் புகழ்பெற்ற நடிகையாக விளங்கிய கிருஷ்ண குமாரி - சிவாஜி, என்.டி. ராம ராவ், நாகேஸ்வர ராவ், ராஜ்குமார் போன்ற பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். 150 தெலுங்குப் படங்களிலும் 30 தமிழ் மற்றும் கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார்.

கிருஷ்ண குமாரியின் மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.