சொகுசு கார் வழக்கு: நடிகை அமலா பால் கைதாகி விடுதலை!
சொகுசு கார் வரி ஏய்ப்பு வழக்கில் நடிகை அமலா பால் கேரளக் காவல்துறையினரால் கைதாகி பிறகு விடுதலை செய்யப்பட்டார்...
சொகுசு கார் வரி ஏய்ப்பு வழக்கில் நடிகை அமலா பால் கேரளக் காவல்துறையினரால் கைதாகி பிறகு விடுதலை செய்யப்பட்டார்.
கேரளத்தைச் சேர்ந்த அமலா பால், புதுச்சேரியைச் சேர்ந்தவர் போல போலியான முகவரியைக் காட்டி, சொகுசு கார் வாங்கியுள்ளார். கேரளத்தில் அந்த காரை வாங்கி பதிவு செய்தால் 20 சதவீதம் அளவுக்கு, அதாவது சுமார் 20 லட்சம் வரை வரி செலுத்த வேண்டும். ஆனால், புதுச்சேரியில் வரி குறைவு என்பதால், போலி முகவரி மூலம் காரை அங்கு பதிவு செய்துள்ளார் என்று குற்றம்சாட்டி கேரளக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், அந்த காரை வாங்குவதற்காக அமலா பால் கேரளத்தில்தான் கார் கடன் பெற்றுள்ளார் என்றும் கூறியிருந்தனர். எனினும், இந்தக் குற்றச்சாட்டை மறுத்து வருகிறார் அமலா பால்.
நேற்று மாலை கொச்சியில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான அமலா பாலை கேரளக் காவல்துறை கைது செய்து, பிறகு சொந்த ஜாமீனில் விடுதலை செய்தது. இதே வழக்கில் நடிகர்கள் சுரேஷ் கோபி, பஹத் ஃபாசில் ஆகியோரும் கைதாகி விடுதலையாகியுள்ளார்கள்.