செய்திகள்

பிரபல இந்தி நடிகரின் மகன் மற்றும் மனைவி மீது பாலியல் வன்முறை & கருக்கலைப்பு குற்றச்சாட்டு!

தாயும், மகனும் மிரட்டிய மிரட்டலில் தற்போது இந்த இளம்நடிகை மும்பையில் தன் உயிருக்குப் பாதுகாப்பில்லை எனக் கருதி டெல்லிக்கு ஜாகை மாறியுள்ளதாகத் தகவல்.

சரோஜினி

பாலிவுட்டில் மிதுன் சக்ரவர்த்தியை அறியாதவர்கள் இருக்க முடியாது. 80 களில் இந்தித் திரையுலகை கலக்கிய இந்தி நடிகர்களில் இவரும் ஒருவர். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியுடன் நெருக்கமாகக் கிசுகிசுக்கப்பட்ட நடிகர்கள் ஒருவர். அவரது மகன் மஹாக்‌ஷாய், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி நம்ப வைத்து பலமுறை தன்னுடன் உறவு கொண்டதாகவும், அதனால் தான் கருவுற்ற நிலையில் மஹாக்‌ஷாய் தன்னுடைய ஆரோக்யத்துக்காக என்று கூறி ஏதோ மாத்திரையை விழுங்கச் செய்ததால் தற்போது தனக்கு கருக்கலைப்பு ஏற்பட்டு விட்டதாகவும். இதற்கு நியாயம் கேட்டு அவரது அம்மாவும், நடிகர் மிதுன் சக்ரவர்த்தியின்  மனைவியுமான யோகிதா பாலியை  அணுகினால் அவரும் தன்  மகனுடன் சேர்ந்து கொண்ட தன்னை மிரட்டுவதாகவும் இந்தி மற்றும் பொஜ்புரி திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். அவரது குற்றச்சாட்டின் அடிப்படையில் தற்போது நடிகர் மிதுன் சக்ரவர்த்தியின் மகன் மற்றும் மனைவி மீது காவல்துறை வழக்குப் பதிந்து இருவர் மீதும் எஃப ஐ ஆர் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தாயும், மகனும் மிரட்டிய மிரட்டலில் தற்போது இந்த இளம்நடிகை மும்பையில் தன் உயிருக்குப் பாதுகாப்பில்லை எனக் கருதி டெல்லிக்கு ஜாகை மாறியுள்ளதாகத் தகவல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தவ் தாக்கரே வீட்டின் அருகே பறந்த ட்ரோன்! உளவு பார்த்தாக குற்றச்சாட்டு!

டெக்சாஸ்: 3 சக ஊழியர்களைக் சுட்டுக்கொன்று இளைஞர் தற்கொலை

தில்லியில் காற்று சுத்திகரிப்பான் நிலையே இப்படி என்றால் மனிதர்கள் நிலை?

வீர நரசிம்மர் ஆலய குடமுழுக்கு: திரளான பக்தர்கள் பங்கேற்பு!

நடிகர் அபிநய் காலமானார்!

SCROLL FOR NEXT