இன்னும் பல சுப்ரமணியபுரங்களைத் தருக: சசிகுமாருக்கு பிரபல பாலிவுட் இயக்குநர் கோரிக்கை!
மிக அற்புதமான படமான சுப்ரமணியபுரம் வெளிவந்து பத்து வருடங்களாகிவிட்டன. இந்தப் படம்தான்...
சசிகுமார் இயக்கத்தில் ஜெய், சசிகுமார், சமுத்திரக்கனி, ஸ்வாதி நடிப்பில் வெளிவந்த சுப்ரமணியபுரம் வெளிவந்து இன்றுடன் 10 வருடங்களாகிவிட்டன.
தமிழ்த் திரையுலகில் முக்கியமான படம் என்று ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றுள்ள இந்தப் படம் குறித்து பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் எழுதிவருகிறார்கள்.
இந்நிலையில் சுப்ரமணியபுரம் படத்தின் மிகப்பெரிய ரசிகரான பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் இதுகுறித்து ட்வீட் செய்ததாவது:
Advertisement
சசிகுமார், சுப்ரமணியபுரம் போன்ற ஒரு மகத்தான படத்தைக் கொடுத்து இன்றுடன் பத்து வருடங்களாகிவிட்டன. ஆனால் இன்று நீங்கள் நடிகராகிவிட்டீர்கள். இன்னும் பல சுப்ரமணியபுரம் போன்ற படங்களைத் தருக என்று கோரிக்கை வைத்துள்ளார். மற்றொரு ட்வீட்டில், மிக அற்புதமான படமான சுப்ரமணியபுரம் வெளிவந்து பத்து வருடங்களாகிவிட்டன. இந்தப் படம்தான் கேங்ஸ் ஆஃப் வாஸேப்பூர் படம் எடுக்க ஊக்கமாக அமைந்தது என்றும் கூறியுள்ளார்.