வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘மாநாடு’!
இது ஓர் அரசியல் படம் என்பதை அதன் போஸ்டர் வழியாக அறிந்துகொள்ள முடிகிறது...
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்துக்கு மாநாடு என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை வெங்கட் பிரபு இன்று வெளியிட்டார். இது ஓர் அரசியல் படம் என்பதை அதன் போஸ்டர் வழியாக அறிந்துகொள்ள முடிகிறது.
சென்னை-600028 II படத்துக்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘பார்ட்டி’. இந்தப் படத்தில் ஷாம், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா கெஸண்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ், நாசர், சந்திரன், சத்யராஜ் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். பிரேம்ஜி இசையமைத்துள்ளார். பார்ட்டி படத்துக்கு அடுத்ததாக மாநாடு படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார்.
Advertisement
நடிகர் சிம்பு, மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்துள்ளார். அதற்கு அடுத்ததாக மாநாடு படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படம் அடுத்த வருடம் கோடை விடுமுறைச் சமயத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.