கமல் நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம் 2 படத்தில் பூஜா குமார், ஆண்டிரியா, சேகர் கபூர், ராகுல் போஸ், வஹீதா ரஹ்மான், நாசர் போன்றோர் நடித்துள்ளார்கள். தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் நேரடியாக உருவாக்கப்பட்டுள்ள விஸ்வரூபம் 2 படம், தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. ஆக, ஒரே நாளில் மூன்று மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இசை - ஜிப்ரான், பாடல்கள் - வைரமுத்து, கமல். இந்தப் படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளிவர உள்ளது.
'விஸ்வரூபம் 2' படம் வெளியாகவுள்ள அதே சமயத்தில், ஆகஸ்ட் 10-ம் தேதி நயன்தாரா நடித்துள்ள 'கோலமாவு கோகிலா'வும் வெளியாகவிருக்கிறது. கோகோ என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் நெல்சன் இயக்கியுள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரெய்லர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கமலின் அரசியல் பிரவேசத்திற்கு பிறகு வெளிவரும் படமாக ‘விஸ்வரூபம் 2' உள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் அதிகளவில் இப்படம் உள்ளது. போலவே 'கோலமாவு கோகிலா' படமும் அதே தேதியில் வெளியாக உள்ளதால் திரை ரசிகர்களுக்கு இந்தச் செய்தி இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.