செய்திகள்

நீங்கள் ஏன் மற்றவர்கள் போல் இல்லை என்று கேட்பது எவ்வளவு பெரிய வன்முறை? இதோ பேரன்பின் முதல் டீசர்! 

DIN

ராமின் பேரன்பு திரைப்படத்தின் முதல் டீசர் ஞாயிற்றுக்கிழமை வெளியாகியுள்ளது. 

கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி என படத்துக்குப் படம் தமிழ் ரசிகர்களின் பரவலான பாராட்டுகளைப் பெற்று வருபவர் இயக்குநர் ராம். இவரின் அடுத்தப் படைப்பாக உருவாகியுள்ள பேரன்பு வெளிவருவதற்கு முன்பே பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், படம் சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பப்பட்டு பாராட்டுக்களை பெற்று வருகிறது. 

இந்தப் படத்தில் மம்மூட்டி, சரத்குமார், அஞ்சலி, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். தங்க மீன்கள் படப் புகழ் பேபி சாதனா மம்மூட்டியின் மகளாக நடித்துள்ளார். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படம் ஆகஸ்ட் மாதத்தில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நா. முத்துக்குமாரின் மறைவால் தற்போது ராம் - யுவன் - வைரமுத்து என்கிற புதிய கூட்டணி இந்தப் படத்தில் உருவாகியுள்ளது. வைரமுத்துவுடன் கருணாகரன், சுமதி ராமும் இந்தப் படத்தில் பாடல்கள் எழுதியுள்ளார்கள்.

படத்தின் பாடல்களும் டீசரும் ஜூலை 15 அன்று வெளியிடப்படும் என்று படத்தின் முதல் தோற்ற வெளியீட்டின் போது படக்குழுவினர் அறிவித்தனர். அதன்படி, இந்த படத்தின் முதல் டீசர் ஞாயிற்றுக்கிழமை வெளியானது. 

அடுத்த ஞாயிற்றுக்கிழமை பேரன்பின் அடுத்த டீசர் வெளியாகும் என்று இந்த டீசரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குன்னத்தூா் அருகே கா்ப்பிணி மனைவி, கணவருடன் தூக்கிட்டு தற்கொலை

ரயிலில் அடிபட்ட பெண் உயிரிழப்பு

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மெக்கானிக் பலி

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: 1,352 வேட்பாளா்களில் 9% போ் மட்டுமே பெண்கள்

தங்கம் விலை: பவுன் ரூ.240 குறைவு

SCROLL FOR NEXT