செய்திகள்

ரூ. 300 கோடி வசூலித்து ‘சஞ்சு’ ஹிந்திப் படம் சாதனை!

இந்தியாவில் அதிகளவில் வசூலித்த ஹிந்திப் படங்களில் ஆறாவது இடத்தைப் பிடித்து சாதனை செய்துள்ளது சஞ்சு படம்...

எழில்

இந்தியாவில் அதிகளவில் வசூலித்த ஹிந்திப் படங்களில் ஆறாவது இடத்தைப் பிடித்து சாதனை செய்துள்ளது சஞ்சு படம். 

நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை, திரைப்படமாக வெளிவந்துள்ளது. சஞ்சு என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிகர் ரன்பீர் கபூர், சஞ்சய் தத் வேடத்தில் நடித்துள்ளார். ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரன்பீர் கபூர், பரேஷ் ராவல், மனிஷா கொய்ராலா, அனுஷ்கா சர்மா, சோனம் கபூர், தியா மிர்சா போன்றோர் நடித்துள்ளார்கள். 

மூன்று வாரங்களுக்கு முன்பு வெளியான சஞ்சு படம் முதல் வாரத்தில் ரூ. 200 கோடி வசூலை எட்டி சாதனை படைத்தது. அதற்கு முன்பு பாகுபலி 2 படம் (ஹிந்தி) 6 நாள்களில் ரூ. 200 கோடியைத் தொட்டது. இதையடுத்து டைகர் ஜிந்தா ஹை படமும் ஏழு நாள்களில் ரூ. 200 கோடியை எட்டியது. இந்நிலையில் சஞ்சு படமும் ஏழு நாள்களில் ரூ. 203 கோடி வசூலை அடைந்து சாதனை படைத்தது. இதன்மூலம் 3 இடியட்ஸ் படம் இந்தியாவில் வசூலித்த ரூ. 202 கோடி வசூலை ஏழே நாள்களில் தாண்டியது. 

இந்நிலையில் இந்தப் படம் தற்போது ரூ. 300 கோடி வசூலைத் தாண்டி மகத்தான சாதனை செய்துள்ளது. 

சஞ்சு படம் முதல் வாரம் ரூ. 203 கோடியும் இரண்டாவது வாரம் ரூ. 93 கோடியும் மூன்றாவது வாரம் ரூ. 21 கோடியும் வசூலித்துள்ளது. அதாவது கடந்த ஞாயிறு வரை இந்தியாவில் ரூ. 317 கோடி வசூலித்துள்ளது. இதன் அடிப்படையில் இந்தியாவில் அதிகம் வசூலித்த ஹிந்திப் படங்களில் ஆறாம் இடத்தைப் பிடித்துள்ளது. இதுதவிர உலகளவில் இந்தப் படம் ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. 

இந்தியாவில் ரூ. 300 கோடி வசூலித்த ஹிந்திப் படங்கள்

பிகே (2014)
பஜ்ரங்கிபைஜான் (2015)
சுல்தான் (2016)
டங்கல் (2016)
பாகுபலி 2 (2017)
டைகர்ஜிந்தாஹை (2017)
பத்மாவத் (2018)
சஞ்சு (2018)

சஞ்சு படம்: ரூ. 300 கோடி வசூலித்தது எப்படி?

ரூ. 50 கோடி: 2-ம் நாள்
ரூ. 100 கோடி: 3-ம் நாள்
ரூ. 150 கோடி: 5-ம் நாள்
ரூ. 200 கோடி: 7-ம் நாள்
ரூ. 250 கோடி: 10-ம் நாள்
ரூ. 300 கோடி: 16-ம் நாள்

பாகுபலி 2 ஹிந்திப் பதிப்பு இந்தியாவில் ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. அடுத்ததாக டங்கல் படம் ரூ. 375 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இரண்டாம் இடம் பிடித்தது. இதையடுத்து சஞ்சு படம் இந்த இரு படங்களின் வசூலையும் தாண்டுமா என்கிற எதிர்பார்ப்பு தற்போது நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பத்துக்கும் மேற்பட்ட யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மளிகை கடை வீடுகளை இடித்து அட்டகாசம்

ஆணவக்கொலைக்கு எதிராக தனிச் சட்டம் வருமா? முதல்வர்தான் சொல்லணும் என துரைமுருகன் பதில்

நடிகர் மதன் பாப் காலமானார்

பத்த வச்சுட்டியே பரட்டை... கூலி டிரைலர் இறுதியில் காக்கா சப்தம்!

மனைவி தனது காதலனுடன் பழகி வந்ததாக சந்தேகப்பட்ட கணவன் இரு குழந்தைகளுடன் தற்கொலை!

SCROLL FOR NEXT