செய்திகள்

சிவகார்த்திகேயன் படத்தில் பின்னணிப் பாடகராக அறிமுகமாகும் ‘சூப்பர் சிங்கர்’ வெற்றியாளர் செந்தில் கணேஷ்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகி வரும் சீமராஜா படத்தில் ஒரு பாடல் பாடி திரையுலகுக்கு...

DIN

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று கடந்த ஞாயிறன்று நடைபெற்றது. இதில் மக்களின் பேராதரவுடன் வெற்றி பெற்றார் நாட்டுப்புறக் கலைஞரான செந்தில் கணேஷ். இதையடுத்து ஏற்கெனவே வாக்குறுதி அளித்தபடி ஏ.ஆர். ரஹ்மான் இசையில் செந்தில் கணேஷ் பாடவுள்ளார்.

இந்நிலையில் அதற்கு முன்பு, சிவகார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகி வரும் சீமராஜா படத்தில் ஒரு பாடல் பாடி திரையுலகுக்கு அறிமுகமாகியுள்ளார் செந்தில் கணேஷ். இதுகுறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பை இசையமைப்பாளர் இமான் வெளியிட்டுள்ளார். 

யுகபாரதி எழுதியுள்ள பாடலை செந்தில் கணேஷ் பாடியுள்ளதாக இமான் அறிவித்துள்ளார். 

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் திறமையாகப் பாடும் பாடகர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்பளித்து வருகிறார் இசையமைப்பாளர் இமான். இதையடுத்து செந்தில் கணேஷுக்கும் இமான் இசையில் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT