செய்திகள்

கடைக்குட்டி சிங்கம் படத்தைப் பாராட்டிய குடியரசுத் துணைத் தலைவர்: சூர்யா, பாண்டிராஜ் உற்சாகம்!

எழில்

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் - கடைக்குட்டி சிங்கம். இதில் விவசாயி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கார்த்தி.

இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை நடிகரும் கார்த்தியின் சகோதரருமான சூர்யா தயாரித்துள்ளார். சத்யராஜ், சூரி, சயீஷா, ப்ரியா பவானிசங்கர் போன்றோர் நடித்துள்ளார்கள். தெலுங்கிலும் வெளியாகும் இந்தப் படத்துக்கு சின்னபாபு என்று பெயரிடப்படுள்ளது. 

சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பைக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கண்டுகளித்துள்ளார். இதையடுத்து ட்விட்டரில் இந்தப் படத்தைப் பாராட்டி அவர் எழுதியதாவது:

சமீபத்தில் தெலுங்கு மொழியில் வெளியான "சின்னபாபு" (தமிழில் "கடைக்குட்டி சிங்கம்") திரைப்படத்தைப் பார்த்தேன். கிராமத்து பசுமை பின்னணியில், நம் பழக்க வழக்கங்களை, மரபுகளை மற்றும் வாழ்க்கை முறையை, ஆபாசம் இல்லாமல் காட்டிய சுவாரசியமான நல்ல படம் என்று ட்விட்டரில் எழுதியுள்ளார். 

இதனால் குஷியாகியுள்ள சூர்யா, கார்த்தி, பாண்டிராஜ் ஆகியோர் ட்விட்டரில் வெங்கய்ய நாயுடுக்கு நன்றி தெரிவித்துள்ளார்கள். 

சூர்யா ட்வீட் செய்ததாவது:

நாட்டு மக்களின் பெருமதிப்புக்குரிய தாங்கள், எங்களின் படைப்பான 'கடைக்குட்டி சிங்கம்' திரைப்படத்தைப்  பார்த்து மனம் திறந்து  பாராட்டியது, எங்களுக்கு மிகுந்த ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கிறது. படக்குழுவினர் அனைவரின் சார்பாகவும், தங்களுக்கு மனப்பூர்வமான நன்றிகள் என்று கூறியுள்ளார்.

இயக்குநர் பாண்டிராஜ் ட்வீட் செய்ததாவது:

நன்றி சார்! உங்கள் வார்த்தைகள் இது போன்ற நல்ல திரைப்படங்கள் எடுக்க எங்களுக்கு மேலும் உத்வேகம் தரும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீரற்ற இதயத் துடிப்பு: மாநகராட்சி ஊழியருக்கு நவீன பேஸ்மேக்கா்

8-ஆவது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம்

திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரா் கோயிலில் அமுது படையல் விழா

மாணவா்களின் எதிா்கால லட்சியம் நிறைவேற நான் முதல்வன் திட்டம் உதவும்: ஆட்சியா்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 3-ஆவது நாளாக எரியும் காட்டுத் தீ

SCROLL FOR NEXT