முகப்பு
செய்திகள்

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.-க்குக் கெளரவம்: பிரபுதேவா காவல்துறை அதிகாரியாக நடிக்கும் ‘பொன் மாணிக்கவேல்’!

பிரபுதேவா நடிக்கும் படத்துக்கு இமான் இசையமைப்பது இதுவே முதல்முறை... 

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:16 PM
பகிர்:

முதல்முறையாகக் காவல்துறை அதிகாரியாக நடித்துவருகிறார் பிரபுதேவா.

பொன் மாணிக்கவேல் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை பிரபுதேவாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஏ.சி. முகில் இயக்கி வருகிறார். நிவேதா பெத்துராஜ் கதாநாயகியாகத் தேர்வாகியுள்ளார்.

இசை - இமான். பிரபுதேவா நடிக்கும் படத்துக்கு இமான் இசையமைப்பது இதுவே முதல்முறை. 

தமிழகத்தில் கோயில் சிலைகள் திருட்டுத் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் சமீபகாலமாக அதிகக் கவனம் பெற்றுள்ளார். இந்நிலையில் அவருடைய பெயர், பிரபுதேவா காவல்துறை அதிகாரியாக நடிக்கும் இந்தப் படத்தின் தலைப்பாக மாறியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →