முகப்பு
செய்திகள்

இயக்குநர் மணி ரத்னம் நலமுடன் உள்ளார்: நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்திக்கு மறுப்பு!

வழக்கமான உடல்நலப் பரிசோதனைக்காக அப்போலோ மருத்துவமனைக்கு மணி ரத்னம் இன்று சென்றிருந்தார்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:20 PM
பகிர்:

பிரபல இயக்குநர் மணி ரத்னம் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான செய்திகளுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணி ரத்னம் இயக்கத்தில் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் 17-வது தயாரிப்பில் உருவாக்கப்பட்டு வரும் படம் - செக்கச் சிவந்த வானம். அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இசை: ஏ.ஆர்.ரஹ்மான். ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன், படத்தொகுப்பு: ஸ்ரீகர் பிரசாத். 

இந்நிலையில், நெஞ்சு வலி காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் மணி ரத்னம் இன்று அனுமதிக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. ராவணன் படத்தை இயக்கியபோது மணி ரத்னத்துக்கு முதல்முறையாக நெஞ்சு வலி ஏற்பட்டது. இதன்பிறகு ஓ காதல் கண்மணி படத்தை இயக்கியபோது மீண்டும் அதே நெஞ்சு வலியால் தில்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மீண்டும் அதே பிரச்னைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து ரசிகர்கள் மிகவும் கவலையடைந்தார்கள்.

Advertisement

இந்நிலையில் மணி ரத்னத்தின் செய்தித்தொடர்பாளர் நிகில் ட்விட்டரில் தெரிவித்ததாவது: வழக்கமான உடல்நலப் பரிசோதனைக்காக அப்போலோ மருத்துவமனைக்கு மணி ரத்னம் இன்று சென்றிருந்தார். அவர் நலமுடன் உள்ளார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments