செய்திகள்

சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!

எழில்

கர்நாடகா தவிர உலகெங்கும் வெளியாகியுள்ள காலா படம், சவுதி அரேபியாவிலும் தற்போது வெளியாகியுள்ளது.

இதிலுள்ள பெருமை - சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் என்கிற பெருமையை காலா பெற்றுள்ளது. 

1980களில் சவுதி அரேபியாவில் திரைப்படங்களுக்குத் தடை விதிக்கப்பட்டன. மத அமைப்புகளிடமிருந்து வந்த அழுத்தம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்தத் தடையை நீக்குவதாகக் கடந்த வருடம் சவுதி அரேபிய அரசு அறிவித்தது. இதையடுத்து சமீபத்தில் ரியாத்தில் 35 வருடங்கள் கழித்து ஒரு திரையரங்கம் திறக்கப்பட்டது. பிளாக் பாந்தர் - ஹாலிவுட் படம் முதலில் வெளியிடப்பட்டது.  

இதையடுத்து சவுதி அரேபியாவில் காலா படம் வெளியாகியுள்ளது. இத்தகவலை காலா படத்தைத் தயாரித்துள்ள வுண்டர்பார் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT