முகப்பு
செய்திகள்

ஒரே சமயத்தில் மூன்று மொழிகளில் வெளியிடப்படும் விஸ்வரூபம் 2 டிரெய்லர்!

தமிழ் டிரெய்லரை ஸ்ருதி ஹாசனும் தெலுங்கு டிரெய்லரை ஜூனியர் என்டிஆரும் ஹிந்தி டிரெய்லரை அமீர் கானும்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:16 PM
பகிர்:

கமல் நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம் 2 படத்தில் பூஜா குமார், ஆண்டிரியா, சேகர் கபூர், ராகுல் போஸ், வஹீதா ரஹ்மான், நாசர் போன்றோர் நடித்துள்ளார்கள். தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் நேரடியாக உருவாக்கப்பட்டுள்ள விஸ்வரூபம் 2 படம், தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. ஆக, ஒரே நாளில் மூன்று மொழிகளிலும் வெளியாகவுள்ளது. விஸ்வரூபம் 2 படத்துக்குத் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இசை - ஜிப்ரான், பாடல்கள் - வைரமுத்து, கமல்.

இந்நிலையில் வருகிற திங்கள் அன்று (ஜூன் 11) மாலை 5 மணிக்கு விஸ்வரூபம் 2 படத்தின் டிரெய்லர் மூன்று மொழிகளிலும் வெளியிடப்படுகிறது. தமிழ் டிரெய்லரை ஸ்ருதி ஹாசனும் தெலுங்கு டிரெய்லரை ஜூனியர் என்டிஆரும் ஹிந்தி டிரெய்லரை அமீர் கானும் வெளியிடவுள்ளார்கள். 

படத்தின் வெளியீட்டுத் தேதி டிரெய்லர் வெளியிடப்படும் சமயத்தில் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments