செய்திகள்

மஞ்சு வாரியரின் தந்தை மரணம், மகள் மீனாட்சியுடன் இறுதிச் சடங்கில் கலந்து கொள்கிறார் நடிகர் திலீப்!

இறுதிச் சடங்கு இன்று திருச்சூர், புல்லுவில் இருக்கும் அவரது இல்லத்தில் நடைபெறும் எனத் தெரிகிறது. மாமனாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவே திலீப் தனது மகள் மீனாட்சி சகிதம் திரிச்சூர் சென்றுள்ளார்.

RKV

நடிகை  மஞ்சு வாரியரின் தந்தை மாதவன் வாரியரின் மறைவையொட்டி மஞ்சுவின் முன்னாள் கணவரும் நடிகருமான திலீப் தன் மகள் மீனாட்சியுடன் இன்று மஞ்சுவின் தந்தை வீட்டுக்குச் சென்றார். திலீப்புக்கும் மஞ்சு வாரியருக்கும் திருமணமாகி மீனாட்சி என்ற மகள் இருந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்துப் பெற்றுப் பிரிந்தனர். விவாகரத்துக்கு காரணமாக நடிகர் திலீப்புக்கு, நடிகை காவ்யா மாதவனுடன் இருந்த தொடர்பு குறித்து மலையாளப் படவுலகில் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், அந்தக் கிசு கிசுவின் காரணமாக, காவ்யா மாதவனுக்கு ஏற்பட்ட உளச்சிக்கலுக்கு பொறுபேற்று திலீப், காவ்யாவை இரு வருடங்களுக்கு முன்பு முறைப்படி இரண்டாவது மனைவியாக மணந்துகொண்டார். இதற்கு முதல் மனைவி மஞ்சு வாரியர் மூலம் பிறந்த மகளான மீனாட்சியின் ஒப்புதலும் இருந்ததாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் கடந்தாண்டு மலையாளத் திரையுலகை உலுக்கிய கேரள நடிகை கடத்தல் விவகாரத்தில் திலீப்புக்கும் பங்கு உண்டு. அந்த விவகாரத்தில் திட்டமிட்டு நடிகையைக் கடத்தில் பாலியல் பலாத்காரம் செய்து விடியோ படமெடுக்கச் சொல்லி மாஸ்டர் பிரெய்ன் வேலையைச் செய்தது திலீப் தான் அவர் மீது குற்றம் சாட்டி அவரைக் காவல்துறை கைது செய்து ரிமாண்ட் செய்தது. தொடர்ந்து பல நாட்கள் ஜாமின் கிடைக்காமல் அவதியுற்ற திலீப், தற்போது ஜாமின் கிடைத்து சில மாதங்களாக கைது விவகாரத்தால் தடைப்பட்டுப் போயிருந்த தனது திரைப்படங்களை முடித்துக் கொடுப்பதில் கவனம் செலுத்தி வந்தார்.

இந்நிலையில் நேற்று மஞ்சு வாரியரின் தந்தை மரணத்தை ஒட்டி மகள் மீனாட்சியுடன் முதல் மனைவி மஞ்சு வாரியரின் தந்தை வீட்டுக்கு திலீப் சென்ற விஷயத்தை கேரள மீடியாக்கள் வெளியிட்டுள்ளன.

மஞ்சு வாரியரின் தந்தை மாதவன் வாரியர் அடிப்படையில் ஒரு அக்கவுண்டட். தனியார் நிறுவனம் ஒன்றில் அக்கவுண்டட் ஆகப் பணிபுரிந்து வந்த மாதவன் வாரியர் நீண்ட காலங்களாகப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த சூழலில் தற்போது வயோதிகத்தின் காரணமாக நோயில் இருந்து மீள முடியாமல் மரணம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.

அவரது இறுதிச் சடங்கு இன்று திருச்சூர், புல்லுவில் இருக்கும் அவரது இல்லத்தில் நடைபெறும் எனத் தெரிகிறது. மாமனாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவே திலீப் தனது மகள் மீனாட்சி சகிதம் திரிச்சூர் சென்றுள்ளார்.

மறைந்த மாதவன் வாரியருக்கு மது வாரியர் என்றொரு மகனும் உண்டு. மலையாளத்திரையுலகில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் மது வாரியர் தனது பெற்றோருடன் திருச்சூரில் வசித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸ்திரேலியாவில் யூத எதிர்ப்புத் தாக்குதல்களுக்கு ஈரான் அரசுதான் காரணம்: பிரதமர் அல்பானீஸ்!

கல்குவாரி பிரச்னை: ஃபார்வர்ட் பிளாக் நகரச் செயலர் குத்திக் கொலை! உறவினர்கள் மறியல்!

தூத்துக்குடி நகைக் கடையில் திருட்டு! மும்பை தப்ப முயன்ற இளைஞர் சேலத்தில் கைது!

தில்லி முன்னாள் அமைச்சர் சௌரவ் பரத்வாஜ் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT