செய்திகள்

‘போதை... கோதை’ பெண்ணை விடப் பெரிய போதை உலகில் இல்லை என்கிறது இப்பாடல்!

இந்தப் பாடலைக் கேட்டு யாராவது புகையுறுஞ்சும், உயிர் உறுஞ்சும் போதை பழக்கத்தை விட்டொழித்தார்கள் என்றால் சரி! 

சரோஜினி

கெளதம் வாசுதேவ் மேனனின்  ‘ஒன்றாக எண்டர்டெய்ன்மெண்ட்டின்’ அடுத்த சிங்கிள்ஸ் ‘போதை... கோதை’ என்ற பெயரில் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. பாடலின் நோக்கம் அழகானது. அர்த்தமுள்ளது. ஆண், பெண் பேதமில்லாமல் நண்பர்களாகச் சேர்ந்து கடற்கரையில் பொழுதைக் கரைத்துக் கொண்டிருக்கும் போது விளையாட்டாகத்தான் தொடங்குகின்றது போதை வஸ்துக்களின் புழக்கமும் பழக்கமும். அதை விளையாட்டாகக் கற்றுக் கொண்டு விட முடியாமல் தவிப்பவர்கள் ஏராளம் பேர். ஆனால், அந்தப் போதையெல்லாம் நிஜமான போதை உணர்வைத் தருவதில்லை. ஒரு பெண்ணுடனான காதல் தரும் போதைக்கு முன் இவையெல்லாம் தூசு எனும்படியாக இப்பாடலில் நீள்கின்றது மதன் கார்க்கியின் பேனா. இசை கார்த்திக், பாடலில் காதல் ஜோடிகளாக கவனம் ஈர்க்கிறார்கள் ஐஸ்வர்யா ராஜேஷும், அதர்வாவும்.

போதை... கோதை பாடலைக் கேட்க விடியோ லிங்க்...

இந்தப் பாடலைக் கேட்டு யாராவது புகையுறுஞ்சும், உயிர் உறுஞ்சும் போதை பழக்கத்தை விட்டொழித்தார்கள் என்றால் சரி! 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தாகம் தீர்க்கும் இளநீருடன்... ரோஸ் சர்தானா

ஒருநாள் தொடருக்கான அணியில் என்னுடைய பெயர் இருக்காதென முன்பே தெரியும்: ஜடேஜா

கேரளத்தில் ஆர்எஸ்எஸ் முகாம்களில் பாலியல் தொல்லை? பாதிக்கப்பட்ட இளைஞர் தற்கொலை!

தங்கத்தை விட கலைமாமணி விருதுக்கு மதிப்பு அதிகம்! முதல்வர் ஸ்டாலின்

நிவின் பாலியின் சர்வம் மயா டீசர்!

SCROLL FOR NEXT