முகப்பு
செய்திகள்

ரத்ததானம் செய்தனர் விஜய் ரசிகர்கள்!

நடிகர் விஜய்யின் 44வது பிறந்த தினத்தை முன்னிட்டு கரூரில் அவரது ரசிகர்கள் ரத்த தானம், நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:02 PM
பகிர்:

நடிகர் விஜய்யின் 44-வது பிறந்த தினத்தை முன்னிட்டு கரூரில் அவரது ரசிகர்கள் ரத்த தானம், நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

கரூர் ரெயின்போ ரத்த தான வங்கியில் மாவட்டத் தலைவர் வி.பி.மதியழகன் தலைமையில் 50-க்கும் அதிகமான ரசிகர்கள் ரத்த தானம் அளித்தனர். தொடர்ந்து, வெண்ணைமலை அன்புக்கரங்கள் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானம், குமரன் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் வழங்கினர். கரூர் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மாவட்டச் செயலாளர் ஜி.பாலு, திரளான ரசிகர்கள் பங்கேற்றனர்.

திருவண்ணாமலை மாவட்ட தலைமை விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள், கொய்யா செடிகள் உள்ளிட்ட அரிய வகை மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன. நடிகர் விஜய்யின் 44-ஆவது பிறந்த நாள் விழா, விவசாயிகளுக்கு நல உதவிகள் வழங்கும் விழா ஆகியவை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

Advertisement

திருவண்ணாமலை, உழவர் சந்தையில் மாவட்ட தலைமை விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற விழாவுக்கு இயக்கத்தின் மாவட்டத் தலைவர் கே.பாரதிதாசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் எஸ்.கலைச்செல்வன், மாவட்ட பொருளாளர் கே.அன்பழகன், மாவட்ட துணைத் தலைவர் ஆர்.கலையரசு, மாவட்ட இளைஞரணித் தலைவர் ஏ.சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொண்டரணி வினோத்குமார் வரவேற்றார்.

உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகள், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பாதுகாக்கப்பட்ட குடிநீர் தொட்டியை மாவட்ட தலைவர் கே.பாரதிதாசன் திறந்துவைத்தார். தொடர்ந்து, விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள், கொய்யா செடிகள் உள்பட பல்வேறு அரிய வகை மரக்கன்றுகள், பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

முன்னதாக, மகளிரணி சார்பில் பெண்கள் பங்கேற்ற பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து, இளையாத்தாம்மன் கோயிலில் பாலாபிஷேகம், சிறப்பு அபிஷேக - ஆராதனை நடைபெற்றது. 44 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. விழாவில், இயக்கத்தின் நகரத் தலைவர் ஆர்.சக்தி, மாவட்ட மாணவரணி நிர்வாகிகள் எஸ்.ஏழுமலை, கே.சதீஷ், ஏ.பிரேம், மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் பூங்குழலி, மனோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சன் பிக்ஸ்ர்ஸ் விஜய்க்கு பிறந்தநாள் பரிசாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் பெயரையும் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் நேற்று வெளியிட்டது. சர்கார் என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தின் மூன்று போஸ்டர்களையும் விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments