வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்.. தில் இருந்தா வாங்கலே..: காலா பட டீசர் வெளியீடு!
வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்.. தில் இருந்தா வாங்கலே உள்ளிட்ட பஞ்ச் வசனங்கள் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை...
2.0 படத்தையடுத்து பா. இரஞ்சித் இயக்கத்தில் காலா என்கிற படத்தில் நடித்துள்ளார் ரஜினி. நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனத்தின் சார்பில் இப்படத்தைத் தயாரித்துள்ளார். இப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் வெளியாகிறது. இதற்கு முன்பு ரஜினியை வைத்து கபாலி படத்தை இயக்கினார் பா.இரஞ்சித். அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ரஜினியை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது. ஹூமா குரேஷி, சமுத்திரக்கனி, நானா படேகர், ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
ஏப்ரல் 27 அன்று வெளியாகும் காலா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசரில் ரஜினி பேசும் வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்.. தில் இருந்தா வாங்கலே உள்ளிட்ட பஞ்ச் வசனங்கள் ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.