முகப்பு
செய்திகள்

காலா டீசரை முறைகேடாக வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளார் தனுஷ்!

அதிகாரபூர்வமாக வெளியாகும் முன்பு காலா டீசர் இணையத்தில் முறைகேடாக வெளியானது. இதனால் அதிர்ச்சியடைந்த...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:23 PM
பகிர்:

2.0 படத்தையடுத்து பா. இரஞ்சித் இயக்கத்தில் காலா என்கிற படத்தில் நடித்துள்ளார் ரஜினி. நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனத்தின் சார்பில் இப்படத்தைத் தயாரித்துள்ளார். இப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் வெளியாகிறது. இதற்கு முன்பு ரஜினியை வைத்து கபாலி படத்தை இயக்கினார் பா.இரஞ்சித். அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ரஜினியை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது. ஹூமா குரேஷி, சமுத்திரக்கனி, நானா படேகர், ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

ஏப்ரல் 27 அன்று வெளியாகும் காலா படத்தின் டீசர் இன்று காலை 10 மணிக்கு வெளியாகவுள்ளதாக நேற்று தனுஷ் அறிவித்தார். ஆனால் அதிகாரபூர்வமாக வெளியாகும் முன்பு காலா டீசர் இணையத்தில் முறைகேடாக வெளியானது. இதனால் அதிர்ச்சியடைந்தது காலா படக்குழு. இதையடுத்து நள்ளிரவு 12 மணிக்கு காலா டீசரை அதிகாரபூர்வமாக வெளியிட்டார் தனுஷ். 

இந்நிலையில் காலா டீசரை இணையத்தில் கசிய விட்டவர்கள் மீது தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் நடவடிக்க எடுக்கவுள்ளது. சைபர் கிரைமில் இதுகுறித்து புகார் அளிக்கவுள்ளதாகச் செய்தி வெளியிட்டுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.