இதை ஒரு நகை முரண் என்பதா அல்லது வேறெந்த வகையில் குறிப்பிடுவது? நடிகை ஸ்ரீதேவி இறந்த துபையில் தான் அவர் முன்பு வரைந்திருந்த ஓவியத்தை ஒரு தொண்டு நிறுவனத்தினர் ஏலம் விட ஏற்பாடு செய்துள்ளனர்.
நடிகை ஸ்ரீதேவிக்கு ஓவியம் வரைவதில் அதிக ஈடுபாடு உண்டு. நடிப்பில் அவர் ப்ரேக் எடுத்திருந்த சமயங்களில் ஓவியம் வரைவதில் தீவிரமாக இருந்தார். சிறுவயது முதலே அவருக்கு படங்கள் வரைவதில் ஆர்வமுண்டு. ஆனால் அந்த வயதிலேயே அவர் நடிப்பில் பிஸியாக இருந்ததால் அவரால் அதில் கவனம் செலுத்த இயலாமல் போனது.
நடிகையாக வெற்றி பெற்று, போனி கபூரைத் திருமணம் செய்தபின் சில ஆண்டுகள் ஸ்ரீதேவி படங்களில் நடிக்கவில்லை. அப்போது அவர் ஐந்து வருடங்கள் தொடர்ந்து ஓவியங்களை வரைந்தார். இயற்கைக் காட்சிகள், தலைவர்கள் மற்றும் பெண்கள் படங்களை ஓவியமாகத் தீட்டியுள்ளார் ஸ்ரீதேவி. அவரது நண்பர் சல்மான் கான் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலருக்கு ஸ்ரீதேவி ஓவியங்களை பரிசளித்துள்ளார். மகள்கள் ஜான்வி மற்றும் குஷியை வரைந்து அவர்களிடம் தந்துள்ளார். அத்தை ஸ்ரீதேவியின் அன்புப் பரிசான ஓவியத்தை நடிகை சோனம் கபூர் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார்.
ஸ்ரீதேவி வரைந்த அந்த ஓவியத்தைத் தான் ஒன்றைத் தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு முன்பு வழங்கியிருக்கிறார். அந்த ஓவியத்தைத் துபாயில் ஏலம் விட தொண்டு நிறுவனத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். ஏலத்துக்கு வரவிருக்கும் அந்த ஓவியம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவருகிறது. ஸ்ரீதேவி மறைந்தாலும் அவர் வரைந்த கலைவடிவமான ஓவியம் தற்போது புகழ் பெற்றுவருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.