செய்திகள்

விஜய் படத்தில் வரலட்சுமி: மேலும் சில அதிகாரபூர்வத் தகவல்கள் வெளியீடு!

இந்தப் படத்தில் வரலட்சுமி நடிக்கவுள்ளதாக சன் பிக்சர்ஸ், வரலட்சுமியின் பிறந்தநாளான நேற்று அறிவித்தது...

எழில்

விஜய் - இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இணையும் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். இது விஜய் நடிக்கும் 62-வது படம். 

மெர்சல் படத்துக்குப் பிறகு மீண்டும் விஜய் நடிக்கும் படத்துக்கு இசையமைக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான். ஒளிப்பதிவாளராக கிரிஷ் கங்காதரனும் படத்தொகுப்பாளராக ஸ்ரீகர் பிரசாத்தும் பணியாற்றவுள்ளார்கள்.

இந்நிலையில் இந்தப் படத்தில் வரலட்சுமி நடிக்கவுள்ளதாக சன் பிக்சர்ஸ், வரலட்சுமியின் பிறந்தநாளான நேற்று அறிவித்தது. மேலும் இப்படத்தில் ராதா ரவி, யோகி பாபு ஆகியோரும் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தண்ணீரில் பிரசவம்...

ஒரு கோயில்: இரு நாடுகளின் சண்டை

பெண்கள் அழகாய் இருக்க..

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

SCROLL FOR NEXT