நடிகர் சசிகுமாரின் 'அசுரவதம்' படத்தின் மிரட்டலான ட்ரெய்லர்!
சுப்ரமணியபுரத்தில் அறிமுகமாகிய சசிகுமாரின் திரைவாழ்க்கை ஆரம்பத்தில் இயக்கம் நடிப்பு என்ற இரு தோணியில் வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருந்தாலும்,
சுப்ரமணியபுரத்தில் அறிமுகமாகிய சசிகுமாரின் திரைவாழ்க்கை ஆரம்பத்தில் இயக்கம் நடிப்பு என்ற இரு தோணியில் வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருந்தாலும், நடிப்புக்கு அவர் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதால் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். 'கொடிவீரன்' படத்தைத் தொடர்ந்து அசுரவதம் மற்றும் நாடோடிகள் 2 படங்களில் நடித்துவருகிறார்.
'அசுரவதம்'. இந்தப் படத்தை மருதுபாண்டியன் இயக்கியுள்ளார். நந்திதா கதாநாயகியாக நடித்துள்ளார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்ய கோவிந்த் மேனன் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் டீஸரை இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சில நாட்களுக்கு முன் வெளியிட்டார். தற்போது இதன் ட்ரெயில்லரை தனது டிவிட்டரில் சசிகுமார் பகிர்ந்துள்ளார். ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்தப் படம் ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை கிளப்பியுள்ளது. ட்ரெய்லரும் அதனை உறுதி செய்கிறது. இந்தப் படம் வரும் ஏப்ரல் 13-ம் தேதி வெளியாகவிருக்கிறது.