செய்திகள்

நடிகர் சிவகார்த்திகேயனை நெகிழச் செய்த ரசிகர் தந்த வித்தியாசமான பரிசு இதுதான்!

தான் நடிக்கும் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் சிறப்பான நடிப்பாற்றலை வழங்கி ரசிகர்களை மகிழ்விக்கும் ஆற்றல்

சினேகா

தான் நடிக்கும் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் சிறப்பான நடிப்பாற்றலை வழங்கி ரசிகர்களை மகிழ்விக்கும் ஆற்றல் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு உண்டு. ரஜினி, விஜய், தனுஷ் ஆகியோரைத் தொடர்ந்து குழந்தைகளைக் கவர்ந்த ஹீரோ அவர். 

திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்னால் சின்னத் திரையில் தோன்றி ரசிகர்களின் மனங்களை கவர்ந்துவிட்டவர் அவர். சிவகார்த்திகேயன் தற்போது தொடர்ச்சியாக படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். பேரும் புகழும் பெற்ற நிலையில் சிவகார்த்தியேனுக்கு ஒரு மனக்குறை இருந்துவந்தது. அது என்னவெனில், தான் சம்பாதித்து தனது தந்தைக்கு எதுவுமே வாங்கிக் கொடுத்ததில்லை என்பதுதான். மேலும் அவரின் பாசமிகு தந்தையுடன் ஒரு புகைப்படம் கூட எடுத்ததில்லை என்பதும் அவர் மனத்தில் நீண்ட நாட்களாக உள்ள குறை. ஒரு விருது வாங்கும் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் இவ்விஷயங்களைப் கூறி, இந்த விருதை தான் பெறுவதைப் பார்த்து மகிழ என் தந்தை உயிருடன் இல்லை என்று கண்கலங்க ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியைப் பார்த்த அவரது ரசிகர் ஒருவர், சிவகார்த்திகேயன் மைக்கில் பேசிய புகைப்படத்தை எடுத்து, சிவகார்த்திகேயனின் தோளில் அவரது தந்தை ஒரு கை போட்டபடி ஓவியமாக வரைந்து, சிவகார்த்திகேயனுக்கு பரிசளித்துள்ளார். ஓவியத்தைப் பார்த்து நெகிழ்ச்சியடைந்த சிவகார்த்திகேயன் அந்த ரசிகருக்கு ட்விட்டரில் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.88.66 ஆக நிறைவு!

பிரதி மாதம் மாமன்றக் கூட்டத்தை நடத்த பாஜக வலியுறுத்தல்

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT