விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில், மித்ரன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், ஜார்ஜ் சி வில்லியம் ஒளிப்பதிவில் விஷால், சமந்தா, அர்ஜுன், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘இரும்புத் திரை’படத்தின் ஆங்க்ரி பேர்ட் எனும் ப்ரொமோ பாடல் கடந்த மாதம் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை 1,211,427 பார்வையாளர்களைப் பெற்றுள்ளது இந்த விடியோ. இதில் சமந்தாவின் க்யூட் சிரிப்பும் அவரது முகபாவங்களும், அவர் அணிந்திருக்கும் அழகான சேலைகளும் ரசிகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்றது.
ரங்கஸ்தலம் என்ற தெலுங்குப் படத்தின் ட்ரெயிலர் வெளியானது. இந்நிலையில் சமந்தா இரும்புத்திரை படத்தை பெரிதும் எதிர்ப்பார்க்கிறார். இதில் சமந்தா முதல் முதலாக ரதிதேவி என்ற பெயரில் மனநல மருத்துவராக நடித்துள்ளதாராம். இந்தப் பாடல் மற்றும் அது படமாக்கம் செய்யப்பட்ட விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.