செய்திகள்

விரைவில் தொடங்கவிருக்கிறது பிக் பாஸ் சீஸன் 2! நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் பிரபலம் யார்?

2017-ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. பிக் பாஸ் வீட்டில் நூறு நாட்கள் தங்கி வெளியுலகத் தொடர்பில்லாமல் இருப்பதும் பிக் பாஸ் சொல்லும்

ராக்கி

2017-ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. பிக் பாஸ் வீட்டில் நூறு நாட்கள் தங்கி வெளியுலகத் தொடர்பில்லாமல் இருப்பதும் பிக் பாஸ் சொல்லும் பணிகளை செய்து முடிப்பதும்தான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் இலக்கு. கணேஷ் வெங்கட்ராம், சக்தி, சினேகன், ஆரவ், ஓவியா, பிந்து மாதவி, ஜூலி, காயத்ரி ரகுராம், உள்பட மொத்தம் 19 பேர் இந்த நிகழ்ச்சியில் போட்டியிட்டனர். 100 நாட்கள் முடிந்த நிலையில் ஆரவ் வெற்றி பெற்றார். ஒவ்வொரு வார இறுதியிலும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியதால் இந்நிகழ்ச்சி அதிக கவனம் பெற்றது. இந்த ஆண்டு ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியைத் தொடங்கியுள்ள கமல்ஹாசன், தற்போது அதை பலப்படுத்தும் முயற்சியில் உள்ளார்.  

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மக்களிடையே கிடைத்த ஆதரவைத் தொடர்ந்து இதன் இரண்டாவது சீஸன் ஜூன் 22-ம் தேதி முதல் தொடங்கவிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கவிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனமழை எச்சரிக்கை! செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பு

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

மேட்டூர் அணை: தண்ணீர் திறப்பு குறைப்பு!

விராலிமலை: விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

பாகிஸ்தான்: வெடிகுண்டு தாக்குதலில் இருந்து தப்பிய எக்ஸ்பிரஸ் ரயில்

SCROLL FOR NEXT