செய்திகள்

பாபநாசம் படம் பார்த்த கிறிஸ்டோபர் நோலன்: கமல் ஆச்சர்யம்!

எழில்

உலகளவில் புகழ்பெற்ற இயக்குநரான கிறிஸ்டோபர் நோலன் 3 நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். மார்ச் 30 முதல் ஏப்ரல் 1 வரை நடக்கவுள்ள திரைப்படம் தொடர்பான கருத்தரங்கில் கலந்துகொள்ள இந்தியாவுக்கு அவர் வருகை தந்துள்ளார். டிஜிட்டல் யுகத்தில் செலுலாயிடின் முக்கியத்துவம் குறித்த தலைப்பில் அவர் உரையாடவுள்ளார்.

இந்நிலையில் நேற்று நோலனை மும்பையில் சந்தித்துள்ளார் கமல் ஹாசன். இதுகுறித்து கமல் ட்வீட் செய்ததாவது: 

நோலனைச் சந்தித்தேன். டிஜிட்டல் முறையில் டன்கிரிக் படத்தைப் பார்த்ததற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டேன். பதிலுக்கு ஹேராம் படத்தின் டிஜிட்டல் பிரதியை அவருக்கு வழங்கவுள்ளேன். அவர் பாபநாசம் படத்தைப் பார்த்திருக்கிறார். இதை அறிந்து ஆச்சர்யப்பட்டேன் என்று கூறியுள்ளார்.

இண்டர்ஸ்டெல்லர், டன்கிர்க், இன்சப்சன், தி டார்க் நைட் போன்ற புகழ்பெற்ற ஆங்கிலப் படங்களை கிறிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ளார். நோலன், இந்தியாவுக்கு வருகை தருவது இதுவே முதல்முறை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT