ரசிகர்களுடன் நடிகர் விஜய் சந்திப்பு!
கேரள மாநிலம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள தன்னுடைய ரசிகர்களைச் சந்தித்து..
தன்னுடைய கேரள ரசிகர்களை சென்னையில் இன்று சந்தித்துள்ளார் விஜய்.
விஜய் - இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இணையும் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். இது விஜய் நடிக்கும் 62-வது படம். மெர்சல் படத்துக்குப் பிறகு மீண்டும் விஜய் நடிக்கும் படத்துக்கு இசையமைக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான்.
இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் தன்னுடைய ரசிகர்களைச் சந்தித்துப் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் விஜய், இன்று கேரள மாநிலம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள தன்னுடைய ரசிகர்களைச் சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
சென்னையிலுள்ள பனையூரில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பின் புகைப்படங்களும் விடியோவும் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.