மாரி 2 படப்பிடிப்பில் சாய் பல்லவி பிறந்தநாள் கொண்டாட்டம் (படங்கள்)
தனுஷ், சாய் பல்லவி, இயக்குநர் பாலாஜி மோகன் உள்ளிட்ட பலர் இந்தக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்கள்...
தனுஷ் - பாலாஜி மோகன் கூட்டணியில் உருவாகும் படம் - மாரி 2. இதில் சாய் பல்லவி, வரலட்சுமி ஆகியோர் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
நேற்று சாய் பல்லவியின் பிறந்தநாள். இதனையொட்டி, மாரி 2 படப்பிடிப்பில் சாய் பல்லவியின் பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடினார்கள். தனுஷ், சாய் பல்லவி, இயக்குநர் பாலாஜி மோகன் உள்ளிட்ட பலர் இந்தக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்கள். இதே நிகழ்வில் நடிகர் அடிதாங்கி வினோத்துக்கும் பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ந்தார்கள் மாரி 2 படக்குழுவினர்.