முகப்பு
செய்திகள்

பிரபுதேவாவுடன் திருமணமா?: நடிகை நிகிஷா படேல் விளக்கம்

பிரபுதேவாவைத் திருமணம் செய்யப் போவதாக வெளியான செய்திகள் உண்மையல்ல என நடிகை நிகிஷா படேல் விளக்கம்... 

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:03 PM
பகிர்:

பிரபுதேவாவைத் திருமணம் செய்யப் போவதாக வெளியான செய்திகள் உண்மையல்ல என நடிகை நிகிஷா படேல் விளக்கம் அளித்துள்ளார்.

பவன் கல்யாண் ஜோடியாக புலி என்கிற தெலுங்குப் படத்தில் 2010-ல் அறிமுகமானவர், நிகிஷா படேல். தமிழில் தலைவன், என்னமோ ஏதோ, கரையோரம், நாரதன், 7 நாட்கள் போன்ற படங்களில் நடித்துள்ளார். கஸ்தூரி ராஜா இயக்கத்தில் பாண்டி முனி படத்தில் நடித்து வருகிறார். 

பிரபுதேவாவை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரைத் திருமணம் செய்ய விருப்பப்படுகிறேன் என நிகிஷா படேல் சமீபத்தில் கூறியதாகச் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

கடந்த சில நாள்களாக பிரபுதேவாவைத் திருமணம் செய்வது குறித்த ஊடகங்களின் கேள்விகளால் சோர்வடைந்துள்ளேன். இதுகுறித்து விளக்கம் அளிக்கிறேன். அந்தச் செய்தியில் உண்மையில்லை. இந்தச் செய்தி தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டுள்ளது. நான் என் பணிகளில் மும்முரமாக உள்ளேன் என விளக்கம் அளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.