செய்திகள்

பெண் இயக்குநரின் முதல் படத்தில் நடிக்கவிருக்கும் பிரபல முன்னணி நடிகர் யார்?

இயக்குநர் பாலாவிடம் தாரை தப்பட்டை படத்தில் உதவி இயக்குநராக பணி புரிந்த கீதா ராஜ்புத் தற்போது

சினேகா

இயக்குநர் பாலாவிடம் தாரை தப்பட்டை படத்தில் உதவி இயக்குநராக பணி புரிந்த கீதா ராஜ்புத் தற்போது ஒரு படத்துக்கு திரைக்கதை எழுதி, தயாரித்து, இயக்கவும் உள்ளார்.  இவர் 'என்னைத் தேடிய நான்', 'மயக்கம்',  'கபாலி' ஆகிய மூன்று குறும்படங்களை தயாரித்து இயக்கியிருக்கிறார் கீதா. சமூக விழிப்புணர்வு மிக்க அவரது குறும்படங்களுக்காக சிறந்த இயக்குநர் விருதைப் பெற்றுள்ளார். நர்மதா என்ற இந்தப் படத்தில் 7 வயது சிறுவனின் தாயாக நடிக்கவிருக்கிறார் ‘அட்டக்கத்தி’ புகழ் நந்திதா ஸ்வேதா. விஜய் வசந்த் ஹீரோவாக நடிக்கிறார். ஒளிப்பதிவு - சதீஷ் பி. சரண். 

படத்தைப் பற்றி கீதா ராஜ்புத் கூறியது, இந்தப் படம் முழுக்க முழுக்க ஃபேமிலி எண்டர்டெயின்மெண்ட் வகைமையில் உருவாக்கப்படுகிறது. தாய்க்கும், மகனுக்கும் உள்ள பாசப் பிணைப்பை எமோஷனலாக பதிவுச் செய்யும். இளம் கதாநாயகியான நந்திதா ஸ்வேதா, ஏழு வயது ஆண் குழந்தைக்கு தாயாக நடிக்கிறார். கதையின் நாயகனாக நடிக்கும் விஜய் வசந்த் வித்யாசமான கெட்டப்பில் முற்றிலும் புதிய கதாபாத்திரத்தில் தோன்றுவார். நாகர்கோயிலில் இப்படத்துக்காக பிரமாண்டமான செட் ஒன்று திறந்த வெளி அரங்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது’ என்றார் கீதா.

அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இதில் கௌரவ வேடத்தில் நடிக்க பிரபல நடிகர் ஒருவரிடம் கேட்டுள்ளாராம் கீதா. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் ஒப்படைப்பு

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

SCROLL FOR NEXT