செய்திகள்

ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி! (படங்கள்)

எழில்

இயக்குநர் வசந்த பாலன் - ஜி.வி. பிரகாஷ் இணையும் படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

ஆர்யா பங்கேற்ற எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்ட அபர்னதி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். ராதிகவும் இப்படத்தில் நடிக்கிறார். இசை - ஜி.வி. பிரகாஷ். தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் கவனம் பெற்ற அபர்னதி அறிமுகமாகும் முதல் படம் இது. 

குப்பத்து ராஜா, சர்வம் தாள மயம், 100% காதல், 4ஜி, அடங்காதே, ஆதிக் ரவிசந்திரன் படம் என ஆறு படங்களில் தற்போது நடித்து வருகிறார் ஜிவி பிரகாஷ். மேலும் இயக்குநர்கள் விஜய், சசி, வசந்த பாலன் ஆகியோருடன் இணைந்து படம் செய்யவுள்ளார். 2014-ல் வசந்த பாலன் இயக்கிய காவியத் தலைவன் வெளியானது. அதன்பிறகு அவர் இயக்கும் படம் இது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT