என்னுடைய வளர்ச்சிக்கு காரணம் தினேஷ் கார்த்திக்; ஜித்தேஷ் சர்மா உருக்கம்!
தன்னுடைய வளர்ச்சிக்குக் காரணம் தினேஷ் கார்த்திக் என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் ஜித்தேஷ் சர்மா மனம் திறந்துள்ளார்.
தன்னுடைய வளர்ச்சிக்குக் காரணம் தினேஷ் கார்த்திக் என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் ஜித்தேஷ் சர்மா மனம் திறந்துள்ளார்.
இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ஜித்தேஷ் சர்மா ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த பிப்ரவரி மாதத்தில் ஜித்தேஷ் சர்மாவின் தந்தை காலமானார். அதன் பின், மிகவும் கடினமான காலக் கட்டத்தை கடந்து வந்துள்ளார் ஜித்தேஷ் சர்மா.
இந்த நிலையில், தன்னுடைய தந்தையின் இழப்புக்குப் பின் பெரிய துயரத்திலிருந்து மீண்டு வர தினேஷ் கார்த்திக் உதவியதாகக் கூறி ஜித்தேஷ் சர்மா அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இது தொடர்பாக அவர் ஆர்சிபியின் பாட்காஸ்ட்டில் பேசியதாவது: என்னுடைய தந்தை இறந்த பிறகு, உன்னுடைய குடும்பத்துடனும், நண்பர்களுடனும் நேரத்தை செலவிடு, சற்று ஓய்வெடுத்துக் கொள் என தினேஷ் கார்த்திக் என்னிடம் கூறினார். அது எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. என்னுடைய வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் தினேஷ் கார்த்திக் அண்ணாதான். என்னுடைய ஆட்டத்தை நன்றாக புரிந்துகொள்ள அவர் எனக்கு மிகவும் உதவினார். மனதளவில் நான் வலுவாக இருக்கவும் அவர் மிகுந்த உதவியாக இருந்தார்.
சின்னசாமி திடலில் சிவப்பு மற்றும் ஊதா நிற ஜெர்சியில் மீண்டும் களமிறங்கியபோது, மீண்டும் பிறந்தது போன்று உணர்ந்தேன். அணியுடன் இணைந்தது நான் மீண்டும் நானாக இருப்பதற்கு உதவியது. என்னை ஒரு விக்கெட் கீப்பராக மட்டுமின்றி, ஃபினிஷராகவும் ஃபீல்டராகவும் பார்க்கிறேன். அணியின் தேவைக்கேற்ப என்னுடைய பங்களிப்பை வழங்க காத்திருக்கிறேன். இந்திய அணிக்காக விளையாடுவதே என்னுடைய மிக முக்கியமான இலக்கு என்றார்.
Royal Challengers Bangalore player Jitesh Sharma has opened up, stating that Dinesh Karthik is the reason behind his growth.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.