செய்திகள்

விரைவில் இயக்குநராகிறார் அரவிந்த் சாமி!

படத்தின் தொழில்நுட்பக் குழுவையும் தேர்வு செய்துவிட்டேன். இந்த வருட இறுதியில் படப்பிடிப்பை ஆரம்பிக்கவுள்ளேன்...

எழில்

நடிகர் அரவிந்த்சாமி, விரைவில் இயக்குநராகவுள்ளார். 

இதுகுறித்து அவர் பேட்டியளித்ததாவது:

திரைப்பட உருவாக்கம் குறித்து நன்குக் கற்றுக்கொண்டுள்ளதாக எண்ணுகிறேன். அதனால்தான் தற்போது இயக்குநராகத் தயாராகிவிட்டேன். அது கடினமான பணியாக இருந்தாலும் புதிரானதல்ல. என்னுடைய கதை முக்கியமான இயக்குநர்கள் சிலரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. படத்தின் தொழில்நுட்பக் குழுவையும் தேர்வு செய்துவிட்டேன். இந்த வருட இறுதியில் படப்பிடிப்பை ஆரம்பிக்கவுள்ளேன் என்று கூறியுள்ளார். 

அரவிந்த்சாமி நடிப்பில் உருவான பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் சமீபத்தில் வெளியானது. சதுரங்க வேட்டை 2, வணங்காமுடி, நரகாசுரன், செக்கச் சிவந்த வானம் ஆகிய படங்கள் நடித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் விதிமீறல்! - உச்ச நீதிமன்றத்தில் பிரசாந்த் கிஷோர் வழக்கு!

மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டி: ஜெமிமா ரோட்ரிக்ஸ் அரைசதம்; ஆர்சிபிக்கு 204 ரன்கள் இலக்கு!

பிசிசிஐ முன்னாள் தலைவர் அனுராக் தாக்கூர் மீதான தடை நீக்கம்! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

ரஷியா - உக்ரைன் போரில் 55,000 வீரர்கள் பலி: ஸெலென்ஸ்கி

மோடி மீது தாக்குதல் முயற்சி? காங்கிரஸின் உண்மை முகம்..! | செய்திகள் சில வரிகளில் | 05.02.26

SCROLL FOR NEXT