செய்திகள்

விளையாட்டில் மட்டுமல்லாமல் நாட்டுக்காக பல விஷயங்களை செய்வார்! தோனிக்கு விக்னேஷ் சிவன் புகழாரம்!

சினேகா

ஐபிஎல் கிரிக்கெட் 2018 இறுதி ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சென்னை மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. சென்னை அணியின் வாட்சன் அதிரடியாக ஆடி 117 ரன்கள் குவித்தார். முன்னதாக ஹைதராபாத் அணி 178/6 ரன்களை எடுத்திருந்தது. 

சென்னை அணி வெற்றி பெற்றதும் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினார். அதனை அடுத்து நெட்டிசன்கள் சமூக இணையதளங்களில் விதம் விதமான ஹேஷ்டேக்குகளை உருவாக்கி இந்த வெற்றியை மேலும் வைரலாக்கி வருகின்றனர். பிரபலங்கள் பலரும் தங்கள் மகிழ்ச்சியை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டம் தோனியைப் பற்றி தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதில்,

ஒரு நாள் தோனி நம் நாட்டின் பிரதமாராக மாறினால் எப்படி இருக்கும்?
என்ன ஒரு தலைமை பண்பு!
என்ன ஒரு மனிதர்!
விளையாட்டு வீரர்கள் தங்களது 40 வயதுகளில் காணாமல் போகின்றனர். ஆனால் தோனி விஷயத்தில் அப்படி நடந்துவிடக் கூடாது. தோனி விளையாட்டுத் துறையில் மட்டுமல்லாமல் நாட்டுக்காகவும் சேவை செய்ய வேண்டும். அவர் மேன்மேலும் உயரங்களை அடைய வேண்டும். நிறைய நல்ல விஷயங்களை எதிர்காலத்தில் செய்யவேண்டும்' என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் விக்னேஷ் சிவன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT