செய்திகள்

டிசம்பரில் வெளியாகவுள்ள ‘மாரி 2’: தள்ளிப் போகிறதா ‘எனை நோக்கி பாயும் தோட்டா’?

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தீபாவளிக்கு வெளியாகும் என முதலில் சொல்லப்பட்டது... 

எழில்

தனுஷ் - பாலாஜி மோகன் கூட்டணியில் உருவாகி வரும் படம் - மாரி 2. இதில் சாய் பல்லவி, வரலட்சுமி ஆகியோர் நடித்துள்ளார்கள். இசை - யுவன் சங்கர் ராஜா. 

இந்நிலையில் இப்படத்தின் முதல் தோற்றத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் இந்தப் படம் டிசம்பரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா நடிப்பில் உருவாகியுள்ள படம் - எனை நோக்கி பாயும் தோட்டா. தர்புகா சிவா இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் இயக்குநரும் நடிகருமான சசிகுமார் கெளரவ வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தீபாவளிக்கு வெளியாகும் என முதலில் சொல்லப்பட்டது. பிறகு அதுவும் நடைபெறாத நிலையில் இதன் வெளியீடு மேலும் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. டிசம்பரில் மாரி 2 படம் வெளியாவதால் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் வெளியீடு மேலும் தள்ளிப்போகிறது. படத்தின் வெளியீடு குறித்த அதிகாரபூர்வத் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத் திட்ட உதவிகள் வழங்கினாா் எம்எல்ஏ

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT