பிரபல சின்னத்திரை நடிகர் மாரடைப்பினால் மரணம்
பிரபல சின்னத்திரை நடிகர் விஜயராஜ் மாரடைப்பினால் சனிக்கிழமை இரவு மரணமடைந்தார்.
பழனி: பிரபல சின்னத்திரை நடிகர் விஜயராஜ் மாரடைப்பினால் சனிக்கிழமை இரவு மரணமடைந்தார்.
பிரபல சின்னத்திரை இயக்குநர் திருமுருகன் இயக்கத்தில் உருவான 'மெட்டி ஒலி' நாடகத்தில் அறிமுகமானவர் விஜயராஜ்(43). பின்னர் அவர் கோலங்கள், நாதஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார்.
அதேபோல் திருமுருகன் இயக்கிய 'எம் மகன்' திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார்.
Advertisement
Advertisement
தற்போது தீபாவளிக்காக தனது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் பழனிக்குச் சென்றுள்ளார். இந்நிலையில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட மாரடைப்பினால் அவர் உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு சின்னத்திரை நடிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்