செய்திகள்

எங்கள் பெயரில் பரவும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம்: தமிழ் ராக்கர்ஸ் விளக்கம் 

எங்கள் பெயரில் சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் விளக்கம் அளித்துள்ளது

DIN

சென்னை: எங்கள் பெயரில் சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் விளக்கம் அளித்துள்ளது
 
புதிய திரைப்படங்களை உடனுக்குடன் இணையதளத்தில் வெளியிட்டு தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வரும் இணையதளம் தமிழ் ரராக்கர்ஸ். பல வருடங்களாக எவ்வளவோ முயற்சித்தும் இந்த தளத்துக்கு பின்னால் செயல்படுபவர்களை பிடிக்கவோ, தளத்தை முடக்கவோ அரசு மற்றும் திரைத்துறையினரால் முடியவில்லை.

சமீபத்தில் தீபாவளி தினத்தன்று விஜய்  நடித்து வெளிவந்த ‘சர்கார்’ படத்தை ‘ரிலீஸ்’ அன்றே வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் பெயரில், சமூக வலைதளமான் ட்விட்டரில் ஒரு சவால் விடப்பட்டது. அதேபோலவே ‘சர்கார்’ படம் ரிலீஸ் அன்றே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடட்டது. இது, தமிழ் பட உலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்த அதிர்ச்சி அடங்கும் முன்னரே ரஜினிகாந்த் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் ‘2.0’ படத்தையும் ரிலீஸ் அன்றே வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் பெயரில் மீண்டும் ட்விட்டரில் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 

இந்நிலையில் எங்கள் பெயரில் சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் விளக்கம் அளித்துள்ளது

இதுதொடர்பாக அந்த தளத்தியல் வெளியாகி  உள்ள அறிவிப்பில்கூறப்பட்டுள்ளதாவது:  
 
ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலோ நாங்கள் இல்லை. எங்களுக்கு அங்கு கணக்குகளே கிடையாது. சமூக வலைதளங்களில் எங்களின் பெயரை பயன்படுத்தி யாராவது பதிவிட்டால், அது போலியே. அதுபோன்ற ஐ.டி.க்களையும், அவர்கள் பரப்பும் வதந்திகளையும் நம்பாதீர்கள். 

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசு ஐடிஐயில் மாணவா் சோ்க்கை: நவ. 14 வரை கால அவகாசம்

‘செயலி’ மூலம் பழகி பணம் பறிப்பு 6 போ் கைது

ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் காத்திருப்புப் போராட்டம்

திண்டுக்கல் அருகே தொழிலாளி கொலை: இருவா் கைது

ஹெராயின் விற்பனை: திரிபுரா இளைஞா் கைது

SCROLL FOR NEXT