செய்திகள்

தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் திருமணம் இத்தாலியில் இன்று நடைபெற்றது!

பாலிவுட் பிரபலங்கள் தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் ஆகிய இருவரும் இன்று காதல் திருமணம் செய்துகொண்டார்கள்...

எழில்

பாலிவுட் பிரபலங்கள் தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் ஆகிய இருவரும் இன்று காதல் திருமணம் செய்துகொண்டார்கள்.

2013-ல் சஞ்சய் லீலா பன்சாலியின் ராம்லீலா படத்தில் தீபிகா படுகோனும் ரன்வீர் சிங்கும் இணைந்து நடித்தார்கள். அப்போது முதல் காதலிக்க ஆரம்பித்த இருவரும் இன்று தம்பதி ஆகியுள்ளார்கள்.

இத்தாலியில் உள்ள லேக் கோமோவில் தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் ஆகிய இருவரும் இன்று காதல் திருமணம் செய்துகொண்டார்கள். இன்றும் நாளையும் கொங்கனி மற்றும் சிந்தி என இருவிதமுறைப்படி திருமணம் நடைபெறவுள்ளது. இன்று, கொங்கனி முறைப்படி நடைபெற்ற திருமணத்தில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.

நவம்பர் 10-ம் தேதி இத்தாலி சென்ற காதல் கோடி, நிச்சயதார்த்தம், சங்கீத், மெஹந்தி ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்கள். 

அடுத்ததாக மும்பை மற்றும் பெங்களூரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT