சோழன் பயணம் தொடர வேண்டும்: ஆயிரத்தில் ஒருவன் 2 படம் குறித்து செல்வராகவன்!
சோழன் பயணம் தொடர வேண்டும் என்பது என்னுள் புதைந்து கிடக்கும் நீண்ட நாள் தாகம்...
புதுப்பேட்டை 2 படம் எடுப்பதை விடவும் ஆயிரத்தில் ஒருவன் 2 படம் எடுக்கவே தான் மிகவும் விரும்புவதாக இயக்குநர் செல்வராகவன் கூறியுள்ளார்.
இயக்குநர் செல்வராகவன் ட்விட்டரில் இதுகுறித்துக் கூறியதாவது:
வெளியே எங்கு சென்றாலும் நண்பர்கள், புதுப்பேட்டை 2 எப்போது என்று அன்பாய் கேட்கின்றனர். நடக்கும் என சொல்வேன். ஆயின் என் மனதுக்குள் கேட்கும் தீரா ஓசை, ஆயிரத்தில் ஒருவன் 2 எடுக்க வேண்டும் என்பதுதான். சோழன் பயணம் தொடர வேண்டும் என்பது என்னுள் புதைந்து கிடக்கும் நீண்ட நாள் தாகம் என்று கூறியுள்ளார்.
Advertisement
எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகும் என்ஜிகே படத்தை இயக்கி வருகிறார் செல்வராகவன். எஸ்.ஜே. சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள நெஞ்சம் மறப்பதில்லை படத்தையும் அவர் இயக்கியுள்ளார்.