முகப்பு
செய்திகள்

ராஜ் கபூரின் மனைவி காலமானார்!

மறைந்த ராஜ் கபூரின் மனைவியும் கரீனா கபூர், கரிஷ்மா கபூர், ரன்பிர் கபூரின் ஆகியோரின் பாட்டியுமான...

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:57 PM
பகிர்:

மறைந்த ராஜ் கபூரின் மனைவியும் கரீனா கபூர், கரிஷ்மா கபூர், ரன்பிர் கபூரின் ஆகியோரின் பாட்டியுமான கிருஷ்ண ராஜ் கபூர், இன்று காலை காலமானார். அவருக்கு வயது 87.

மாரடைப்பின் காரணமாக எனது தாய் இன்று காலை 5 மணிக்குக் காலமானார் என்று ராஜ் கபூரின் மூத்த மகன் ரந்திர் கபூர் தகவல் தெரிவித்துள்ளார். 

1946-ல் ராஜ் கபூர் - கிருஷ்ண ராஜ் கபூருக்கு ஆகியோருக்குத் திருமணம் நடைபெற்றது. ரந்திர்,  ரிஷி, ராஜிவ் என மூன்று மகன்களும் ரிது, ரிமா என இரண்டு மகள்களும் இவர்களுக்கு ஐந்து குழந்தைகள் உள்ளார்கள். ராஜ் கபூர், 1988-ல் மரணமடைந்தார். மூத்த மகன் ரந்திரின் மகள்களான கரிஷ்மா கபூரும் கரீனா கபூரும் ரிஷி கபூரின் மகனான ரன்பிர் கபூரும் பாலிவுட்டில் பிரபல நடிகர்களாக உள்ளார்கள். கிருஷ்ண ராஜ் கபூரின் மறைவுக்குப் பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments