சர்கார்: ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இரண்டாவது பாடல் வெளியீடு!
நாளை நடைபெறவுள்ள இசை வெளியீட்டு விழாவில் அனைத்து பாடல்களும் வெளியிடப்படுகின்றன...
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் சர்கார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்துக்காக ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த சிம்டாங்காரன் என்கிற பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் அடுத்தப் பாடலாக, ஒரு விரல் புரட்சி என்கிற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. நாளை நடைபெறவுள்ள இசை வெளியீட்டு விழாவில் அனைத்து பாடல்களும் வெளியிடப்படுகின்றன.