ஹரிஷ் கல்யாணின் அடுத்தப் படம் அறிவிப்பு!
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்கிறார்...
சமீபத்தில் வெளியான புரியாத புதிர் படத்தை இயக்கிய ரஞ்ஜித் ஜெயக்கொடியின் அடுத்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் பிக் பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண்.
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்கிறார், ஷில்பா மஞ்சுநாத். காளி படத்தில் இவர் நடித்திருந்தார். இசை - சாம் சிஎஸ். தயாரிப்பு - மாதவ் மீடியா.
இப்படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
Advertisement
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான ஹரிஷ் கல்யாண் - ரைசா இருவரும் ஜோடியாக நடித்த படமான பியார் பிரேமா காதல், சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்றது. இதையடுத்து இந்தப் படம் அறிவிக்கப்பட்டுள்ளது.