செய்திகள்

சர்கார் படத்துக்கு யு/ஏ: திட்டமிட்டபடி தீபாவளியன்று வெளியாகிறது!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு...

எழில்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கீர்த்தி சுரேஷ், ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். 

தீபாவளியன்று அதாவது நவம்பர் 6 அன்று சர்கார் படம் வெளியாகவுள்ளது. ஆனால் படத்தை நான்கு நாள் முன்னதாக அதாவது நவம்பர் 2 அன்று வெளியிடவேண்டும் என்று சில கோரிக்கைகள் எழுந்தன. மெர்சல் படத்தை விடவும் அதிக விலைக்கு சர்கார் படம் வியாபாரம் ஆகியுள்ளதால் அதிக விடுமுறை தினங்கள் இருந்தால்தான் முதலீடு செய்த பணத்தைத் திரும்பப் பெறமுடியும் எனக் கருதப்பட்டது. ஆனால் சர்கார் படம் திட்டமிட்டபடி தீபாவளி தினத்தன்று அதாவது நவம்பர் 6 அன்றுதான் வெளிவரவுள்ளது. தமிழ்நாட்டு விநியோகஸ்தர்கள் தீபாவளியன்று படம் வெளியாகவேண்டும் என்று விருப்பம் தெரிவித்ததால் அவர்களின் கோரிக்கையை ஏற்று அதே தினத்தில் படம் வெளிவருகிறது. 

மேலும் தணிக்கையில் இப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. சர்கார் பட வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தாலும் இதற்கு இடைக்காலத் தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. இதனால் சர்கார் படம் நவம்பர் 6 அன்று திட்டமிட்டபடி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோயில் இடத்தில் கட்டிய வீடுகளை காலி செய்யும் விவகாரம்: அறநிலையத் துறையிடம் அவகாசம் கோரி பொதுமக்கள் மனு

காா்த்தி சிதம்பரம் மகள் இரு அரசு பள்ளிகளுக்கு தலா ரூ. 1.10 லட்சம் நிதி உதவி

கோயிலில் கல்வெட்டு அகற்றப்பட்ட விவகாரம்: இளையான்குடி வட்டாட்சியா் அலுவலகத்தை பாஜகவினா் முற்றுகையிட முயற்சி

சிவகங்கையில் செவிலியா்கள் உண்ணாவிரதம்

சிவகங்கையில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: நான்கு தொகுதிகளிலும் 1,50,828 போ் நீக்கம்

SCROLL FOR NEXT