முகப்பு
செய்திகள்

அசலான கேங்ஸ்டர் படம்: வட சென்னையை மெச்சும் பிரபல ஹிந்தி இயக்குநர்!

படத்தை அவர் மிகவும் ரசித்திருக்கிறார் என்பது அவருடைய பாராட்டுகளிலிருந்து தெரிய வருகிறது... 

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:09 PM
பகிர்:

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் - வட சென்னை. தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர் போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - சந்தோஷ் நாராயணன். வட சென்னை படத்தின் கதையை மூன்று பாகங்களாக உருவாக்கத் திட்டுமிட்டுள்ளார் வெற்றிமாறன். எனினும் முதல் பாகத்துக்கு மக்கள் அளிக்கும் வரவேற்பைப் பொறுத்தே இதர பாகங்கள் குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ்ப் படங்களைப் புகழ்ந்து தள்ளும்போது தாராள மனத்தை வெளிப்படுத்துவார் பிரபல ஹிந்திப் பட இயக்குநர் அனுராக் காஷ்யப். இப்போது அவர் சமீபத்தில் வெளியான வட சென்னைப் படத்தைக் கையில் எடுத்திருக்கிறார். படத்தை அவர் மிகவும் ரசித்திருக்கிறார் என்பது அவருடைய பாராட்டுகளிலிருந்து தெரிய வருகிறது. ட்விட்டரில் அவர் கூறியதாவது:

நான் பார்த்த கேங்ஸ்டர் படங்களில் மிகவும் அசலான படம் - வட சென்னை. வெற்றிமாறன், நீங்கள் தொடந்து நல்ல படங்களைத் தரும் அபாரமான இயக்குநர். நம்மிடம் உள்ள இயக்குநர்களில் முக்கியமானவர். ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, தனுஷ் மற்றும் செந்தில், ராஜன், பத்மா கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் சிறப்பாகச் செய்துள்ளார்கள். அன்புக்காகத் தனது தந்தையை எதிர்க்கும் நடிகரும் சிறப்பாக நடித்துள்ளார். இதுபோல பாராட்ட நிறைய விஷயங்கள் உள்ளன என்று கூறியுள்ளார். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments