அயோத்தியில் 200 ஆண்டுகள் பழமையான தேவநாகரி கையெழுத்துப் பிரதி கண்டெடுப்பு!
200 ஆண்டுகள் பழமையான தேவநாகரி கையெழுத்துப்பிரதி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின், அயோத்தியில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான தேவநாகரி கையெழுத்துப்பிரதி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கையெழுத்துப் பிரதியைப் பாதுகாக்க விரைவில் சர்வதேச ராமர் அருங்காட்சியகத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக ஆரங்காட்சியக இயக்குநர் சஞ்சீவ் குமார் சிங் கூறுகையில், இந்தக்கையெழுத்துப் பிரதி 150 முதல் 200 ஆண்டுகள் வரை பழமையானதாக இருக்கலாம்.
Advertisement
Advertisement
நாகரி எழுத்துருவிலிருந்து தேவநாகரியாகப் பரிணமித்த இந்த எழுத்துமுறை, நவீனக் கால எழுத்துக்களுடன் ஒப்பிடும்போது எழுத்து வடிவங்களில் மாறுபாடுகளைக் காட்டுவதாக அவர் கூறினார். இதில் பழைய கால எழுத்துக்களின் அடிப்பகுதி திறந்த நிலையிலும், உயிரெழுத்துக்கான குறியீடுகள் எழுத்துடன் இணைந்த நிலையிலும் காணப்படுகின்றன இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ள அஸ்ஸாம் மாநிலத்திற்குப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, திப்ருகாரில் உள்ள தேயிலைத் தோட்டத்திற்குச் சென்று அங்குள்ள தொழிலாளர்களுடன் கலந்துரையாடி, தேயிலை இலைகளைப் பறித்த நிகழ்வு நடைபெற்ற சில நாள்களிலேயே பழமையான தேவநாகரி கையெழுத்துப் பிரதி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
A rare manuscript written in Devanagari script, believed to be around 200 years old, has been found in Ayodhya.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.