FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

அயோத்தி நன்கொடை திருட்டு! நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் போராட்டம்!

நாடாளுமன்றத்தில் சமாஜவாதி கட்சி எம்பிக்கள் போராட்டம் பற்றி...

Updated On : 29 ஜூலை 2026, 10:57 am IST
நாடாளுமன்றத்தில் சமாஜவாதி கட்சி எம்பிக்கள் போராட்டம் - X | ANI
பகிர்:

அயோத்தி ராமர் கோயில் நன்கொடை திருட்டு விவகாரத்தில் பாஜகவை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் நடைபெற்ற பிரயாக்ராஜ் கும்பமேளாவின்போது ராமா் கோயிலில் தினமும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் வழிபட்டனா். அப்போது, பக்தா்களால் வழங்கப்பட்ட தங்கம், வெள்ளி, பணம் உள்ளிட்ட காணிக்கைகள் மற்றும் நன்கொடைகளில் முறைகேடு நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு ராமர் கோயிலில் நன்கொடை பணியில் ஈடுபட்டிருந்த எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். சர்ச்சைக்குரிய சூழலில், ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளையின் அப்போதைய பொதுச் செயலாளர் சம்பத் ராய், அறங்காவலர் அனில் மிஸ்ரா ஆகியோர் பதவி விலகினர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், நன்கொடை திருட்டு விவகாரத்தில் பாஜகவை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் சமாஜவாதி கட்சியின் எம்.பி.க்கள் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உத்தரப் பிரதேசத்தை ஆளும் பாஜக அரசை பதவி விலகக் கோரி சமாஜவாதி எம்.பி.க்கள் பதாகைகளுடன் கோஷம் எழுப்பினர்.

summary

Theft of Ayodhya donations! MPs protest in Parliament!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments