செய்திகள்

2.0 டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் 3-ஆவது படைப்பாக 2.0 உருவாகி வருகிறது. 

Raghavendran

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் 3-ஆவது படைப்பாக 2.0 உருவாகி வருகிறது. இதில் நாயகியாக எமி ஜாக்சன் மற்றும் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.

படப்பிடிப்பு கடந்த வருடமே முடிவுற்ற நிலையில், முப்பரிமாண தொழில்நுட்பத்தில் நேரடியாக எடுக்கப்பட்ட படம் என்பதால், கிராபிக்ஸ் காட்சிகளுக்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.  

இதனிடையே மேக்கிங் விடியோக்கள் மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, செப்டம்பர் 13-ம் தேதி டீசர் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில், 2.0 டிரைலர் நவம்பர் 3-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.  நவம்பர் 29 அன்று, அதாவது தீபாவளிக்குப் பிறகு 2.0 படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

SCROLL FOR NEXT